தோற்று வெல்பவர்க்கும் பரிசு தருவேன் -வைரமுத்து பதிவு

பிளஸ்-2 தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்தார். இதையடுத்து மாணவி நந்தினி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். சந்திப்பின்போது மாணவி நந்தினியின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் கூறினார். மாணவி நந்தினிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் கவிஞர் வைரமுத்து, அவர் பெற்ற தங்கப் பேனாவை பரிசளிப்பதாக கவிதையின் வாயிலாக தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாணவி நந்தினியின் வீட்டிற்கு நேரில் சென்று கவிஞர் வைரமுத்து தங்க பேனாவை பரிசளித்தார். மேலும் மாணவி நந்தினிக்கு தனது வாழ்த்துக்களை கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். இந்நிலையில், தோற்று வெல்பவர்க்கும் பரிசு தருவேன் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திண்டுக்கல் ஏழை வீடு எளிய குடில் எட்டுக்கெட்டு அறை இங்கிருந்து வென்ற நந்தினிக்குத்தான் தங்கப் பேனா சேர்கிறது பட்ட பாடுகளை பெற்ற வெற்றிகளைப் பள்ளிகளுக்குச் சென்று சொல்லிக்கொடு மகளே வெற்றியைத் தாண்டித் தோற்றவர்களைத் தத்தெடுங்கள் ஆசிரியர்களே தோற்று வெல்பவர்க்கும் பரிசு தருவேன்” என்று பதிவிட்டுள்ளார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!