திடீரென வெயிட் போட்ட ‘தாம் தூம்’ நடிகை!

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படத்தின் செண்பா கேரக்டரில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். தற்போது இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருந்து வருகிறார். சமீப காலமாக இவரது பெயர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ‘மணிகர்ணிகா’ படத்தின் சர்ச்சை, நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது காதல் என சுற்றி வந்தது. தற்போது அவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார். மேலும் இவர் ‘மென்டல் ஹய் கியா’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் அஸ்வினி ஐயர் இயக்கத்தில் ‘பங்கா’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.