நயன்க்கு மகளாக நடித்த மானஸ்வி தற்போது த்ரிஷாவின் மகளானார்!

நடிகை த்ரிஷா, கடந்த 16 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைக்கான இடத்தை தக்கவைத்து வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இந்த ஆண்டில் வெளியான ‘பேட்ட’ படம் மூலம் நிறைவேறி விட்டது.

தற்போது நடிகை த்ரிஷா, கதாநாயகிகளை மையப்படுத்திய கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ‘மோகினி’ போன்ற பேய் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் ‘பரமபத விளையாட்டு’ என்னும் படத்திலும் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை கே.திருஞானம் இயக்கி வருகிறார். இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்திலும், நடிகை த்ரிஷா தனது அதிரடியான நடிப்பை நிரூபித்திருக்கிறார்.

மேலும் இந்தப் படத்தில் கடந்த வருடம் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்து வனசத்தில் கலக்கியவர் பேபி மானஸ்வி. இவர் த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘பரமபத விளையாட்டு’ படத்திலும் மிரட்டலான வசனத்தை பேசி அனைவரும் பாராட்டும் படி நடித்துள்ளார். அதனுடன் பேபி மானஸ்வி பிரபல நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.