என்னது.. இயக்குனர் பி.வாசு இறந்துவிட்டாரா…? யாரடா இப்படியொரு வேலையை பார்த்தது..!!


இயக்குனர் பி. வாசு இறந்துவிட்டதாக ஒரு செய்தி நேற்று முதல் தீயாக பரவிக் கொண்டிருந்தது.என்னது நான் இறந்துவிட்டேனா என்று அவர் சிரித்திருக்கிறார்.

பின்னர் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பியுள்ளார்.

தான் இன்னும் உயிருடன் இருக்கும் விஷயத்தை வீடியோ மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் பி. வாசு. அந்த வீடியோவை பார்த்த அவரின் ரசிகர்கள், நலம் விரும்பிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

என்னை பற்றிய வதந்தியை நானே கேள்விப்பட்டேன். எனக்கே வாட்ஸ்ஆப்பில் வந்தது. எனக்கு சிரிப்பு வந்தது என்று வீடியோவில் தெரிவித்துள்ளார் வாசு.

இந்த வருஷம் 3 படங்கள் இயக்கப் போகிறேன் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் வாசு.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி