நல்ல நட்புடன் சேர்ந்து சிறந்த படைப்பை உருவாக்க வேண்டும் – நடிகர் நிதின் சத்யா

இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் மஹத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “காதல் கண்டிசன்ஸ் அப்ளை”. நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் லிப்ரா புரொடக்ஷன் ரவீந்தர் வழங்கும் இந்த படத்தில் சனா மகுல், விவேக் பிரசன்னா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான நிதின் சத்யா பேசியதாவது, “இது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஜாலியான ஒரு பீல் குட் திரைப்படம். இந்த படம் கோவிட் காரணமாக சிறிது தாமதமானது. ஆனால் படத்தில் நடித்த அனைவரும் இந்த படத்திற்காக தங்களது முழு ஆதரவையும் கொடுத்தனர். பலருடைய உத்வேகத்தாலும், உதவியாலும் இந்த படம் நன்றாக உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள். நல்ல நட்புடன் சேர்ந்து நல்ல படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது தான் இந்த படம்” என்று கூறினார்.

இயக்குனர் அரவிந்த் பேசியதாவது, “புது இயக்குனர்களை வைத்து படம் எடுப்பதில் பொருளாதார சிக்கல் இருக்க தான் செய்கிறது. அதை தாண்டி தயாரிப்பாளர் நிதின் சத்யா, ரவீந்தர் தொடர்ந்து புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறார்கள், அதற்கு நன்றிகள். இது தொடர வேண்டும். இந்த படத்தில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் எனது நன்றிகள்” என்று கூறினார்.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!