சிறுகுறு வியாபாரிகள் வயிற்றில் அடிப்பதா?: விஜய் சேதுபதிக்கு எதிராக போராட்டம்

விஜய் சேதுபதி நடித்த ஆன்லைன் விளம்பரத்திற்கு வணிகர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

கோலிவுட்டில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. அவர் படங்களில் நடிப்பது மட்டுமின்றி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் பொது மக்களை ஆன்லைனில் மளிகைப் பொருள்களை வாங்க வைக்கும் ‘ஆப்’பான ‘மாண்டி’ (Maandee) விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த விளம்பரம் ஒளிபரப்பாகத் தொடங்கிய போதே சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதிக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன.

அது மட்டுமின்றி படத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுவதெல்லாம் வெறும் நடிப்பா என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டனர்.

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் ஆன்லைன் விளம்பரத்திற்கு தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிறுகுறு வியாபாரிகளைப் பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்திற்குப் பணம் வாங்கி கொண்டு விஜய் சேதுபதி துணை போகிறார். இதனை கண்டித்து வரும் நவம்பர் 4-ம் தேதி விஜய் சேதுபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.

இதை கண்ட விஜய் சேதுபதி ரசிகர்கள் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஏழைகள் என யார் உதவி என்று கேட்டலும், உடனே உதவி செய்யும் நபருக்கா இந்த நிலைமை என்று புலம்பி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!