ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘ரன் பேபி ரன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தற்போது இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் திரில்லர் படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். எஸ் யுவா ஒளிப்பதிவு செய்கிறார். மதன் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த படத்திற்கு ‘ரன் பேபி ரன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் தீம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ‘ரன் பேபி ரன்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 3-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!