23 வயது வித்தியாசமுள்ள நடிகையுடன் ஜோடி போடும் ஜெயம் ரவி.

தந்தையின் சிபாரிசில் நடிக்க வந்து முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் தான் ஜெயம் ரவி. சமீபத்தில் இவர் மேற்கொண்ட பொன்னின் செல்வன் கதாபாத்திரம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. அதை தொடர்ந்து அகிலன் என்னும் படத்திற்கு பிறகு இவர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் தன் 32 ஆவது படத்தில் கமிட்டாகி உள்ளார்.

இப்படத்திற்கு ஜீனி என்ற பெயரை அறிவித்துள்ளனர். ஐசரி கணேஷ் தயாரிப்பில் மேற்கொள்ளும் இப்படம் 100 கோடி ப்ராஜெக்ட்டில் அமைய உள்ளது. அதை தொடர்ந்து இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். அதிலும் குறிப்பாக இப்படத்தில் சுமார் 23 வயது வித்தியாசம் இருக்கும் இளம் நடிகையை ஜோடியாக ஏற்று நடிக்க போகிறார் ஜெயம் ரவி. இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரான புவனேஷ் ஏற்கும் முதல் பெரிய ப்ராஜெக்ட் படம் தான் ஜீனி. பல எதிர்பார்ப்புகளை கொண்டு உருவாக இருக்கும் இப்படத்தில் இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பின் கீழ் உருவாகும் இப்பட பூஜை நாளை நடைபெற உள்ளது. மேலும் இத்தனை வயது வித்தியாசம் இடையே இவர்களின் ஜோடி பொருத்தத்தை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் மாறுபட்ட பரிமாணத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பும் இம்மாதம் 23 முதல் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் கஸ்டடி படத்திற்கு பிறகு கீர்த்தி ஷெட்டி ஏற்கும் இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!