பிரபாஸின் ஆதிபுருஷ் படக்குழுவினருக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்

ராமாயண கதையை மையமாக வைத்து ஆதிபுருஷ் படம் தயாராகி உள்ளது. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

டிரைலரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் வீடியோ கேம் போல் இருப்பதாகவும் ராவணனை தவறாக சித்தரித்து இருப்பதாகவும் கண்டித்தனர். அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குரு ஆதிபுருஷ் படத்தை வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார். பா.ஜனதா பிரமுகர் மாளிகா அவினாஷ், ”இலங்கையை சேர்ந்த ராவணன் சிவ பக்தர். 64 கலைகள் கற்றவர். அவருக்கு ஜாக்கெட் அணிந்து நீல நிற கண்களுடன் சர்வாதிகாரி போல் தவறாக காட்டி உள்ளனர். ராமாயண சரித்திரத்தை தவறாக சித்தரித்து உள்ளனர்” என்று சாடினார்.

இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தில் ராமரையும், ராவணனையும், அனுமனையும் தவறாக சித்தரித்து இருப்பதாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் பிரபாஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.





  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!