இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்ட சந்தானம் படத்தின் போஸ்டர்..

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சாண்டா 15. பெயரிடப்படாத இப்படத்தை புரொடக்‌ஷன் எண்10 (சாண்டா 15) என்று தயாரித்துள்ளனர். சந்தானத்தின் 15-வது திரைப்படமாக தயாராகி உள்ள இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்

. ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். கிக் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, சந்தானத்தின் 15-வது படத்திற்கு “கிக்” என படக்குழு பெயர் வைத்துள்ளது. மேலும், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கவுதம் மேனன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!