விக்னேஷ் சிவன் படத்தில் சிவாவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை – ரசிகர்கள் எதிர்பார்க்காத ஜோடி.!

தமிழ் சினிமாவில் கடின உழைப்பினால் முன்னேறி இன்று முன்னணி நடிகருக்கான அந்தஸ்தை பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் Mr. லோக்கல் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தை அடுத்து நேற்று இன்று நாளை இயக்குனருடன் ஒரு படம், இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ஹீரோ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து லைகா நிறுவனத்தில் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவுப்பு வெளியானது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் புகழ் ரஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.