வெளிநாட்டில் தேசிய கொடியை பறக்க விட்ட விக்கி – நயன்

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு தம்பதியினர் தேனிலவு பயணமாக தாய்லாந்துக்கு புறப்பட்டு, ஒரு வாரத்துக்கு பிறகு நாடு திரும்பினார்கள். அதன் பின்னர் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு பணிகளில் நயன்தாரா பிசியானார்.

இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஸ்பெயினில் 2-வது தேனிலவு பயணத்தைத் மேற்கொண்டு உள்ளனர். இதையடுத்து இவர்கள் இருவம் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் வெளிநாட்டில் தேசியக் கொடியை பறக்கவிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் லைக் செய்து வருகின்றனர்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!