ரஜினியைத் தொடர்ந்து அதிரடி முடிவெடுத்த நடிகர் விஜய்

நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில் ‘சுதந்திர தின அமிர்த பெருவிழா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக ‘இல்லம் தோறும் தேசிய கொடி’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

இதன்படி, வருகிற 13-ந் தேதி முதல் சுதந்திர தினமான 15-ந்தேதி வரையிலான 3 நாட்கள் தங்கள் வீடுகளில் பொதுமக்கள் மூவர்ண கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை அனைத்து இந்தியர்களும் தங்களுடைய சமூக ஊடக கணக்குகளில் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்து இருந்தார்.

மேலும் தனது டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களின் முகப்பு படத்தில் தேசிய கொடியை உடனே அவர் பதிவேற்றம் செய்தார். இதையடுத்து மத்திய மந்திரிகள், பா.ஜ.க. உள்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் தேசிய கொடியை முகப்பு படமாக பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதேபோல் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தன் வீட்டின் முன்பு தேசியக் கொடி ஏற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!