ஸ்ரீகாந்த்-நட்டி கூட்டணியில் உருவாகும் புதிய படம் by priya | @ | July 26, 2022 7:37 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest மைனா, சாட்டை, மொசக்குட்டி, சௌகார்பேட்டை, பொட்டு, கா ஆகிய படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் சம்பவம். இதில் ஸ்ரீகாந்த், நட்டி கதை நாயகர்களாக நடிக்க, கதை நாயகிகளாக பூர்ணா, ஸ்வேதா அவஸ்தி நடிக்கின்றனர். இதன் முக்கிய கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தரா டிராவல்ஸ் படத்தின் நாயகி ராதா நடிக்கிறார். மேலும் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், ஜெயபிரகாஷ், கே.ராஜன், மகேந்திரகுமார் நாகர், சிங்கம்புலி, நாஞ்சில் சம்பத், விஜய் டிவி முல்லை மற்றும் பலர் நடிக்கிறார்கள்.சம்பவம் திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் பா.ரஞ்சித்குமார். இவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் இணைஇயக்குனராக பணிபுரிந்தவர். ஒளிப்பதிவை இனியன் ஜே ஹாரிஸ் கவனிக்க இசை அம்ரீஷ் மற்றும் படத்தொகுப்பு சந்திரகுமார் கவனிக்கின்றனர்.உயிருக்கு போராடும் தனது மகளை காப்பாற்ற துடிக்கும் ஒரு தந்தையும், இந்த சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதனும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது நடைபெறும் சம்பவமே கதையின் மையக்கரு. இதன் துவக்க விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர் திருமலை, மகேந்திரகுமார் நாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சம்பவம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts படப்பிடிப்புக்கு சரியாக வருவது இல்லையா? வதந்திக்கு யோகிபாபு விளக்கம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… ரசிகரின் ஆபாச கேள்வியால் நடிகை ஷாலு ஷம்மு கோபம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து… விஜய் போல் என்னால் நடனம் ஆட முடியாது நடிகர் ஷாருக்கான் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து…