கர்ணன் ஆகிறார் சூர்யா? குஷியில் ரசிகர்கள்

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சூர்யாவின் 44வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சூர்யா 44 படத்தை ராகேஷ் ஓம்பிரகாஷ் மெக்ரா இயக்கவுள்ளதாகவும், இப்படத்தின் மூலம் சூர்யா இந்தியில் அறிமுகமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் மகாபாரத சரித்திர கதையாக உருவாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படத்திற்கு கர்ணா என்று பெயரிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!