அந்த கட்டிடத்தை கொஞ்சம் சீக்கிரம் கட்டுங்கடா.. விஷால் கல்யாணம் பண்ணாம ஏமாத்திட்டு இருக்கான்: உதய்

விஷால் நடித்து இருக்கும் லத்தி படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவுக்கு உதயநிதி ஸ்டாலின் தான் கெஸ்ட்டாக வந்திருந்தார்.

அப்போது மேடையில் உதய் மற்றும் விஷால் இருவரும் ஜாலியாக பேசினார். பள்ளி, காலேஜுக்கு ஒன்றாக சென்றது தொடங்கி, எப்போதும் கோபாலபுரத்தில் ஒன்றாக கிரிக்கெட் விளையாடுவது வரை பல விஷயங்களை கூறினார்கள்.

மேலும் நடிகர் சங்க கட்டிடம் பற்றி விஷால் பேசும்போது ‘அதில் கலைஞர் அய்யா மற்றும் ஸ்டாலின் அங்கிள் பெயர் வரவேண்டும் என முன்பே அவர்களிடம் சொன்னேன். அது விரைவில் நிறைவேற போகிறது” என கூறினார்.

அப்போது குறுக்கிட்ட உதயநிதி ஸ்டாலின், ‘அந்த கட்டிடத்தை கொஞ்சம் சீக்கிரம் கட்டுங்கடா, கல்யாணம் பண்ணாம ஏமாத்திட்டு இருக்கான் இவன்’ என கிண்டலாக கூறினார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!