ட்விட்டரில் தொடங்கிய சுஷ்மிதா சென் – லலித் மோடி காதல்! 10 வருடத்திற்கு முந்தைய ட்விட் வைரல்

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை 1994ல் வென்று அதிகம் பாப்புலர் ஆனவர் சுஷ்மிதா சென். அவர் அதற்கு பிறகு பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இப்போது அவருக்கு 46 வயதாகிறது. தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அவர் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். சென்ற வருட இறுதியில் அவரது பாய் பிரென்டை பிரேக்கப் செய்தார் சுஷ்மிதா.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை தொடங்கியவரான லலித் மோடியுடன் தற்போது சுஷ்மிதா சென் காதலில் இருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி வைரலாகி வருகிறது. லலித் மோடிக்கு 56 வயதாகிறது.


அவர்கள் காதல் தொடங்கியது ட்விட்டரில் தான் என தற்போது பழைய ட்விட்கள் வைரல் ஆகி வருகின்றன. சுஷ்மிதா சென்னுக்கு ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்கி கொடுத்ததே லலித் மோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!