ஹாலிவுட் நடிகர் இதை செய்யும் போது விஜய் செய்ய கூடாதா !

பீஸ்ட்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம் பீஸ்ட்.

பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.

இதனால் இப்படத்தின் வசூல் பல இடங்களில் பெரியளவில் பாதிக்கப்பட்டது, பல இடங்களில் இப்படத்தை தூக்கிவிட்டு KGF 2 படத்தை ஒளிபரப்ப செய்துள்ளனர். 
ரசிகர்களை கவர்ந்த பதிவு  

இந்நிலையில் இப்படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியை அனைவரும் விமர்சித்து உண்டு, அதில் விஜய் Fighter jet ஓடும்போது அவர் சல்யூட் அடித்துவிட்டு செல்வார். இதனை அனைவரும் கடுமையாக விமர்சித்தனர்.

ஆனால் இதையே ஹாலிவுட் படத்தில் Tom Cruise அதேபோல் Fighter jet ஓடும்போது Thumbs Up செய்துவிட்டு செல்வார். இதை விஜய் ரசிகர் ஒருவர் Tom Cruise Thumbs Up செய்கிறார், விஜய் ஏன் சல்யூட் அடிக்க கூடாது என ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

தற்போது அந்த பதிவு ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!