தி வாரியர் – விமர்சனம்

மதுரை நகரையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் தாதா குரு (ஆதி) பட்டப்பகலில், நடுரோட்டில் ஒருவரை வெட்டி சாய்க்கிறார். வெட்டப்பட்டவரை காப்பாற்றவோ, அவரின் அருகில் செல்லவே எல்லோரும் பயப்படுகிறார்கள்.

அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு புதிய டாக்டராக வரும் சத்யா (ராம்), ரத்த வெள்ளத்தில் வெட்டப்பட்டு கிடப்பவரை மருத்துவமனையில் அனுமதிக்கிறார். இதனால் டாக்டர் சத்யாவுக்கும், தாதா குருவுக்கும் இடையில் மோதல் ஆரம்பிக்கிறது. இதனிடையே ராமுக்கும், ரேடியோ ஜாக்கி விசில் மகாலட்சுமிக்கும் (கீர்த்தி செட்டி) இடையில் காதல் மலர்கிறது. டாக்டர் சத்யா அவரின் காதலிக்காக காத்துக் கொண்டிருக்கும் வேலையில், அவரை ஆதி அடித்து உதைத்து கவலைக்கிடமாக்கி விடுகிறார்.

பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அவருக்கு சீனியர் டாக்டர் (ஜெயப்பிரகாஷ்) ரகசியமாக சிகிச்சை அளித்து அவரின் உயிரை காப்பாற்றுகிறார். தாதாவின் ஆட்டங்களை ஒழித்துக் கட்டும் நோக்கில் படித்து 2 வருடங்களுக்குப் பின் சத்யா ‘ஐ.பி.எஸ்.’ படித்து முடித்த போலீஸ் அதிகாரியாக அதே மதுரைக்கு வருகிறார். தாதா குருவை ஒழித்துக்கட்டும் ஒரே நோக்கத்தில் புத்திசாலித்தனமாக சத்யா தனது வேட்டையை தொடங்குகிறார். அவரால் ஆதியை ஒழித்துக்கட்ட முடிந்ததா? இல்லையா? இவர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகள் என்ன? என்பதே படத்தின் மீதி கதை.

தமிழ் சினிமாவில் இதுவரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் கதையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி. காரசார மசாலா கதைக்குள் ஜனரஞ்சகம் சேர்த்து சற்று விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார். இடைவேளைக்குப்பின் வரும் நீண்ட உரையாடல் காட்சி பார்வையாளர்களுக்கு அளுப்பை ஏற்படுத்துகிறது. வில்லனை பழிவாங்க டாக்டர் ஹீரோ போலீஸ் அவதாரம் எடுப்பது பழைய பாணியாக இருந்தாலும் லிங்குசாமியின் திரைக்கதையில் படம் விறுவிறுப்பாக நடந்து ஸ்வாரசியம் ஊட்டுகிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் லாரி துரத்தல் காட்சி ‘லிங்குசாமி’யின் முத்திரைகள்.

டாக்டர் மற்றும் போலீஸ் அதிகாரி என்று இரு அவதாரம் எடுத்திருக்கும் ராம், அந்த கதாப்பாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஒரு டாக்டராக ரவுடிகளின் அராஜகங்களை கண்டு ஆவேசப்படும் காட்சிகளில் ஆதரவை அள்ளுகிறார். அவர் போலீஸ் அதிகாரியாக வருவது, படத்தில் எதிர்பாராத திருப்பமாக விறுவிறுப்பை கூட்டுகிறது. விசில் மகாலட்சுமியாக வரும் கீர்த்தி செட்டி, அவருடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களை இருக்கையில் கட்டிப்போட வைக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ஆதி அவருடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார். இதுவரை கதாநாயகனாக வலம் வந்த ஆதி வில்லனாக மாறியிருப்பது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. ராம் பொத்தினேனியின் அம்மாவாக நடித்திருக்கும் நதியா. மார்க்கெட்டில் வில்லன் ஆதி மிரட்டும் காட்சியில் பயப்படாமல் எச்சரிக்கும் காட்சி, நதியா அனுபவப்பட்ட பழைய கதாநாயகி என்று அடையாளம் காட்டுகிறார்.

கார்-லாரி துரத்தல் காட்சியில் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், அவரின் திறமையை காட்டியிருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அத்தனையும் ‘விசில்’ போட வைத்திருக்கிறது. பின்னணி இசை, காட்சிகளுக்கு வேகம் கூட்டுகிறது.

மொத்தத்தில் ‘தி வாரியர்’ நேர்மை

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!