வட இந்தியாவிலும் விஜய்க்கு இருக்கும் மாஸ்.. இந்த பெயர் மட்டும் மாறவே இல்லை: மாளவிகா மோகனன்

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் மாளவிகா மோகனன்.

அவர் ரஜினி உடன் பேட்ட, தனுஷ் உடன் மாறன் ஆகிய படங்களில் நடித்து இருந்தாலும் தற்போது அவரை எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் ‘நீங்க மாஸ்டர் ஹீரோயின் தானே’ என கேட்கிறார்கள்.

இது தமிழ்நாட்டில் இல்லை.. அவர் வடநாட்டில் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக ஒரு சின்ன கிராமத்திற்கு சென்றபோது அங்கிருக்கும் மக்கள் இவரை பார்த்து அப்படி கேட்டிருக்கிறார்கள்.

மாஸ்டர் மாளவிகா.. இது மட்டும் மாறல

விஜய்க்கு இருக்கு மாஸ் எவ்வளவு என்பது அப்போது தான் மாளவிகாவுக்கு புரிந்ததாம். அது பற்றி அவர் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

தான் ஏற்கனவே Beyond the Clouds என்ற ஹிந்தி படத்தில் நடித்து இருந்தாலும் அது யாருக்கே நினைவில்லை, எங்கு போனாலும் ‘மாஸ்டர் மாளவிகா’ என்கிற பெயர் மட்டும் மாறவே இல்லை எனவும் அவர் கூறி இருக்கிறார். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!