விஜய் பற்றி அப்படி பேசியது தவறு தான்.. மன்னிப்பு கேட்ட பீஸ்ட் பட நடிகர்

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆன படம் பீஸ்ட்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் ரிலீஸ் ஆன நிலையில் அது ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. இந்த படத்தை பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வந்தது. அதனால் வசூலும் அதிகம் பாதிக்கப்பட்டது.

மேலும் அந்த படத்தில் விஜய்க்கு உதவி செய்யும் தீவிரவாதி ரோலில் நடித்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவும் படத்தை விமர்சித்து இருந்தார்.

மேலும் அவர் விஜய் நடிப்பை பற்றியும் மோசமாக பேசியதால் ரசிகர்கள் கடும் கோபம் அடைந்தனர். அவரை சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரோல் செய்தனர்.

மன்னிப்பு கோரினார்
இந்நிலையில் ஷைன் டாம் சாக்கோ அப்படி பேசியதற்காக இன்ஸ்டாகிராமில் மன்னிப்பு கேட்டிருக்கிறார். “அது என் தவறுதான், சாரி நண்பன்” என அவர் கூறி இருக்கிறார்.

“Am really sorry for what I spoke through media.. its my own mistake.. sry nanban” என அவர் பதிவிட்டு இருக்கிறார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!