சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் அஜித், விஜய்க்கு இணையாக வளர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடந்த வருடம் டாக்டர், இந்த வருடம் டான் என ரூ. 100 கோடி வசூல் படங்களை கொடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் அடுத்து அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி இருக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.

அதோடு உக்ரைன் நாட்டு மாடல் அழகி ஒருவர் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு 47 நாட்கள் மொத்தமாம், அதில் 26 நாட்கள் மட்டுமே சிவகார்த்திகேயனுக்கு ஒதுக்கப்பட்ட படப்பிடிப்பு நாட்களாம்.

இந்த 26 நாட்களுக்காக ரூ. 23 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாக ரசிகர்கள் வாய் பிளந்து செய்தியை பார்க்கின்றனர். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!