விக்ரம் இசை வெளியீட்டு விழாவுக்கு ரஜினி, விஜய் வருகிறார்களா?

கமல்ஹாசனின் விக்ரம் பட ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெற உள்ளது. அதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதனால் ட்ரைலர் எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ரஜினி, விஜய் வருகிறார்களா?
விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பங்கேற்பது ஏற்கனவே உறுதியாகி இருக்கிறது. மேலும் இந்த விழாவிற்காக ரஜினி மற்றும் விஜய் ஆகியோரையும் அழைத்து இருக்கிறார்களாம்.

லோகேஷின் முந்தைய படத்தில் விஜய் தான் ஹீரோவாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஜினி கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர். அதனால் அவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு இருக்கின்றனர்.

அவர்கள் வந்தால் இந்த விழா அடுத்த சில நாட்களுக்கு பேசப்படும் ஒன்றாக இருக்கும் சந்தேகமில்லை. 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!