உலகளவில் No.1 இடத்தை பிடித்த பீஸ்ட் ! விஜய்யால் மட்டுமே இப்படியான சாதனைகள் சாத்தியம்..

விஜய்யின் பீஸ்ட்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் பீஸ்ட், பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றுது.

இதனால் இப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய்யின் முந்தைய திரைப்படமான மாஸ்டர் திரைப்படத்தை விட குறைவாகவே வசூலை குவித்தது.

மேலும் பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் முன்பு அப்படத்திற்கு இருந்த வரவேற்பு அனைவரும் அறிந்த விஷயம், டீசர், பாடல்கள் என பீஸ்ட் குறித்து வெளியான அனைத்து விஷயங்களும் பிளாக் பஸ்டர் வரவேற்பை பெற்றது.

உலகளவில் No.1
குறிப்பாக அப்படத்தில் இருந்து முதலில் வெளியான அரபிக் குத்து பாடல் உலகளவில் ட்ரெண்டானது. தமிழ் நட்சத்திரங்கள் மட்டுமின்றி இந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் அப்பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு வந்தனர்.

இதனிடையே பீஸ்ட் திரைப்படம் வெளியாகி இத்தனை மாதங்களுக்கு பிறகும் அரபிக் குத்து பாடல் சாதனை படைத்திருக்கிறது. ஆம், யூடியூப்-ல் தளத்தில் அரபிக் குத்து வீடியோ உலகளவில் No.1 மியூசிக் வீடியோ என சாதனை படைத்திருக்கிறது.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!