காளி போஸ்டரால் சர்ச்சை.. இணையம் எடுத்த அதிரடி முடிவு..

இயக்குனர் லீனா மணிமேகலை தற்போது இயக்கியுள்ள காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. காளி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்றும், கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தி இருப்பது போன்றும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது.


இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதாக கூறி பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் காளி பட போஸ்டர் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இயக்குனர் லீனா மணிமேகலை மீது டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச மாநில போலீசார் 153A மற்றும் 295A ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இதனிடையே டொராண்டோவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகம், இந்திய தூதரகம் அறிவுறுத்தலின் படி காளி ஆவணப்படத்தை திரையிடுவதிலிருந்து நீக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தொடர்ந்து எழுந்த சர்ச்சை காரணமாக இயக்குனர் லீனா மணிமேகலை வெளியிட்ட காளி ஆவணப்பட போஸ்டர் சமூக வலைதள நிறுவனத்தால் நீக்கப்பட்டுள்ளது.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!