மூன்று தலைமுறையாக புன்னகை அரசி என அழைக்கப்பட்ட 3 நடிகைகள்

தமிழ் சினிமாவில் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய பாசிட்டிவான விஷயங்களை வைத்து பட்டங்கள் கொடுப்பதுண்டு. ‘புரட்சி திலகம்’, ‘நடிகர் திலகம்’, ‘காதல் மன்னன்’, ‘சூப்பர் ஸ்டார்’, ‘டாப் ஸ்டார்’, ‘இளைய தளபதி’, ‘வைகை புயல்’ என பல பட்டங்கள் தமிழ் சினிமாவில் உண்டு. சிலருக்கு அவர்கள் நடிக்கும் முதல் படத்தின் பெயர், கேரக்டர்கள் அவர்கள் பெயர்களின் முன்னாள் அடைமொழியாக மாறிவிடும்.

அன்றைய சினிமாவில் ‘நடிகையர் திலகம்’ சாவித்திரி, ‘கலைச்செல்வி’ ஜெயலலிதா, ‘புன்னகை அரசி’ கே ஆர் விஜயா மிக முக்கியமானவர்கள். இதில் ‘புன்னகை அரசி’ என்னும் பட்டத்தை அடுத்தடுத்து இரண்டு தலைமுறையை சேர்ந்த நடிகைகள் பெற்று விட்டார்கள்.

கே ஆர் விஜயா : கே ஆர் விஜயா 1963 ஆம் ஆண்டு சினிமா உலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 400 படங்களில் நடித்துள்ளார். MGR , சிவாஜி, ஜெய் ஷங்கர், ஜெமினி கணேசன், முத்து ராமன் , ஏ. வி. எம். ராஜன், ரவிசந்திரன், பல முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் தான் தமிழ் சினிமாவின் முதல் ‘புன்னகை அரசி.’

பானுப்ரியா: 1980 களின் இறுதியில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பானுப்ரியா. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 111 திரைப்படங்களில் நடித்துள்ளார். பானுப்ரியா ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞர். ரொம்ப மாடர்னாக இல்லாமல் பெரும்பாலும் குடும்ப கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். பரதநாட்டிய கலைகளில் மிக சிறந்தவர்.

சினேகா: 2001 ஆம் ஆண்டு, ‘என்னவளே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா உலகில் ‘புன்னகை அரசி’ என்னும் பட்டத்துடன் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார். சிறந்த நடிகைக்கான மாநில விருது வாங்கி உள்ளார்.

சினேகா 2011 ஆம் ஆண்டு பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகள் சினிமா மட்டுமில்லாமல் பல சமூக சேவைகளையும் செய்து வருகின்றன. டெல்லியில் விவாசாயிகள் போராட்டத்தின் போது 2 லட்சம் நிதி உதவியாக கொடுத்தனர். இது போன்ற பல உதவிகளை செய்து வருகின்றனர். கே ஆர் விஜயா, பானுப்ரியா, சினேகா தங்களது சினிமா வாழ்க்கையில் அழகு, கிளாமரை மட்டும் நம்பாமல் தங்களுடைய நடிப்பு திறமையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!