சமந்தா இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டதா? வெளிவந்த உண்மை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர்களில் ஒருவர்.

சமீபத்தில் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளிவந்தது.

இந்த நிலையில் சமந்தாவின் மேனேஜர் அது குறித்து ஒரு விளக்கம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த பதிவு தவறாக இடம் பெற்றது. தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டது என்று தெரிவித்திருக்கிறார்.

இதன் காரணமாக சமந்தாவின் இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டதாக வெளியான பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!