பாலிவுட்டில் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இயக்கும் ஷங்கர்! இப்படி ஒரு கதையா.. பட்ஜெட் கேட்டு ஷாக்கான ரசிகர்கள்

இயக்குனர் ஷங்கர் பிரம்மாண்ட படங்கள் இயக்குவதற்கு பெயர் பெற்றவர். எந்திரன், 2.0 போன்ற பல பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் எடுத்த அவர் தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

அந்த படத்திற்கு RC15 என தற்காலிகமாக பெயர் சூட்டி இருக்கிறார்கள்.
இந்த படத்தை முடித்தபிறகு ஷங்கர் இந்தியன் 2 படத்தை தொடங்க இருக்கிறார். அதை முடித்தபிறகு அந்நியன் ஹிந்தி ரீமேக் படத்தை இயக்குகிறார் ஷங்கர்.

அந்த படத்தையும் முடித்தபிறகு ஹிந்தியில் ஒரு சயின்ஸ் பிக்ஷ்ன் படம் இயக்குகிறார் ஷங்கர் என தற்போது தகவல் பரவி வருகிறது. அந்த படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் ஹீரோவாகவும், தெலுங்கு நடிகர் ராம் சரண் ஒரு முக்கிய ரோலிலும் நடிக்க இருக்கின்றனர் என சொல்லப்படுகிறது.

மேலும் ஆச்சர்யப்படுத்திய தகவல் எண்னென்றால் இந்த படத்திற்க்கு 1000 கோடி ருபாய் பட்ஜெட் எனவும் சொல்லப்படுகிறது. 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!