விக்ரம் படத்தில் இருந்து ஒரு மணி நேர காட்சி கட் செய்யப்பட்டதா..! ஷாக்கிங் தகவல்

விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் விக்ரம்.

விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளது. மூன்றே நாட்களில் சுமார் ரூ. 165 கோடி வரை உலகளவில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது.

ஷாக்கிங் தகவல்
இந்நிலையில், இப்படத்தின் எடிட்டர் சமீபத்திய பேட்டியில், விக்ரம் படத்தை குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

அதில் ஒன்றாக ” விக்ரம் படத்தின் முதல் எடிட் ரன்னிங் டைம் 4 மணி நேரமாக இருந்தது. அதை தான் டப்பிங் அனுப்பி வைத்தேன். அதன்பின், தேவையான காட்சிகளை மட்டுமே வைத்துக்கொண்டு, மற்றவையை எடிட் செய்து, 2 மணிநேரம் 53 நிமிட படமாக பைனல் அவுட் எடுத்தேன். அதை தான் நீங்கள் திரையில் பார்த்தீர்கள் ” என்று கூறியுள்ளார். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!