விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்! என்ன தெரியுமா?

விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத், சென்னையில் நடக்கிறது. இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தை முடித்தபிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி67 படத்தில் நடிக்கிறார். இந்த படம் பற்றி லோகேஷ் சமீபத்தில் அளித்திருந்த பேட்டிகள் எதிர்பார்ப்பை பல மடங்கு கூட்டி இருக்கிறது.

இந்நிலையில் வரும் ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்தநாள் என்பதால் அன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தளபதி 67 பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

அது மட்டுமின்றி தளபதி66 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அன்று வெளிவரும் என்று தெரிகிறது. 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!