தனுஷ் படத்தில் விஜய் சேதுபதி பட நடிகை

லாட்டா கல்யாணம்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மாறன்’ திரைப்படம் மக்களிடையை கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதையடுத்து, ‘திருசிற்றம்பலம்’, ‘நானே வருவேன்’ போன்ற படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’.

இப்படத்தினை ‘ராக்கி’, ‘சாணிக்காகிதம்’ போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இதில், தனுஷுக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்தது.

ஆனால், பிரியங்கா மோகனிடம் கால்ஷீட் கிடைக்காத காரணத்தால் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கீர்த்தி ஷெட்டி ‘உப்பெனா’ படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!