புஷ்பா 2 படம் இப்படி தான் இருக்கும்.. நடிகை ராஷ்மிகா மந்தனா கொடுத்த அப்டேட்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் புஷ்பா.
இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தென்னிந்திய சென்சேஷன் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

இப்படத்தின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த ராஷ்மிகா, “புஷ்பா மீதான உங்கள் அன்புக்கு நன்றி.. நாங்கள் கடினமாக உழைக்க மட்டுமே விரும்புகிறோம்”.

மேலும் ” புஷ்பா 2 இன்னும் சிறப்பாகவும் பெரியதாகவும் இருக்கும் என நாங்கள் உறுதியளிக்கிறோம்” என கூறி சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!