பொல்லாதவன் திரைப்படம் இந்த ஹாலிவுட் திரைப்படத்தின் காப்பியா! வெற்றிமாறன் அளித்த விளக்கம்..

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள இயக்குனர்களில் முன்னணி இயக்குனராகவும் சிறந்த இயக்குனராகவும் விளங்குபவர் வெற்றிமாறன்.

இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களுமே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றியடைந்தது.

அசுரன் திரைப்படத்தை அடுத்து நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் மற்றும் நடிகர் சூரியுடன் ஒரு திரைப்படமும் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பொல்லாதவன்.

இப்படம் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்றிருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் செட்டிங் திரைப்படமாக அமைந்தது.

மேலும் இயக்குனர் வெற்றிமாறன் அளித்த ஒரு பேட்டியில் பொல்லாதவன் திரைப்படம், Bicycle Thevies என்ற ஹாலிவுட் படத்தின் காப்பியா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த வெற்றிமாறன் “பொல்லாதவன் திரைப்படத்தை ஆரம்பிக்கும் போதே தெரியும், இப்படம் Bicycle Thevies படத்தின் காப்பி என கூறுவார்கள் என்று.

ஆனால் பொல்லாதவன் திரைப்படத்தை Bicycle Thevies திரைப்படத்துடன் ஒப்பிடுவது, அப்படத்தை இழிவு படுத்தும் விதமாக இருக்கும்.

பொல்லாதவன் ஒரு கமர்சியல் படம், Bicycle Thevies ஒரு கிளாசிக் திரைப்படம், இவை இரண்டையும் நாம் ஒப்பிடவே கூடாது” என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!