இயக்குனர் நெல்சனை கடுமையாக விமர்சித்த நடிகர் விஜயின் தந்தை ! பீஸ்ட் பட விவகாரம்..

SAC-ன் கடுமையான விமர்சனம்  
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் பீஸ்ட். பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் மோசனமான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.

இதனால் இப்படம் தமிழகத்தை தவிர மற்ற இடங்களில் பெரிய வசூல் சாதனைகளை ஏதும் நிகழ்த்தவில்லை. அதேசமயம் KGF 2 திரைப்படமும் வெளியாகி தமிழ் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது, இதனால் விஜய் படம் தமிழகத்தில் செம அடிவாங்கியது.

இந்நிலையில் விஜய்யின் தந்தை SAC சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் பீஸ்ட் திரைப்படம் குறித்து பேசியிருக்கிறார். அதில் பீஸ்ட் படம் குறித்த தனது குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.
அவர் கூறியதாவது “நான் ஒரு இயக்குனர், ஒரு இயக்குனராக திரைப்படத்தை விமர்சிக்கிறேன். விஜய்யின் அப்பா என்பதை ஒதுக்கி வைத்திடுங்கள். இரண்டாவது விஷயம், நான் அறிமுக படுத்திய ஹீரோ ஒவ்வொரு படத்திலும் ஒரு படி மேல் போக ஆசைப்படுவேன்.

சும்மா ஒரு அரைபடி கீழே இறங்கினாலும், அயோ அது என்னுடைய ஹீரோவாச்சே என உறுத்தலாக இருக்கும். பீஸ்ட் படத்தில் கடத்தப்பட்டவர்கள், தீவிரவாதிகள் என எந்தஒரு விஷயத்திலும் பயம் வரவில்லை. இதற்கு காரணம் படத்தின் மோசமான திரைக்கதை” என பேசியுள்ளார்.   
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!