விஜய் சொன்ன விஷயத்தால் வியந்த போன டான் பட கதாநாயகி !

விஜய்யை சந்தித்த பிரியங்கா மோகன் 
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகியாக மாறியுள்ளார், நடிகை பிரியங்கா மோகன்.
தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து டாக்டர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுமாகியிருந்தார்.

அதனை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் டான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார், அப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் பீஸ்ட் மற்றும் டான் பட ஷூட்டிங் அருகருகே நடந்திருந்தது, அப்போது இரண்டு படக்குழுவினர்களும் சந்தித்து கொண்டனர். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

இதனிடையே விஜய்யை சந்தித்தது குறித்து பேசியுள்ள பிரியங்கா மோகன், விஜய் சார் டாக்டர் படத்தில் எனது நடிப்பை பாராட்டினார். அதுமட்டுமின்றி தெலுங்கில் ஒரு பாடலை விஜய் பார்த்து பாராட்டியிருந்தார்.

சார் நீங்கள் அதெல்லாம் பாப்பிங்களா என கேட்டதற்கு நான் எல்லாமே பார்ப்பேன் என விஜய் சொன்னதாக பிரியங்கா பேட்டியளித்துள்ளார். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!