இந்தியை ஒருபோதும் ஏற்க மாட்டோம் – இயக்குனர் பா.இரஞ்சித்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் பா.இரஞ்சித் இந்தி குறித்து பேசியுள்ளார்.

மதுரையில் இன்று பிரபல சினிமா இயக்குனர் பா.ரஞ்சித் நிருபர்களிடம் கூறியதாவது: “கலை, இலக்கியம் ஆகியவை அரசியலுக்கான முக்கிய வடிவம். எனவே அவற்றை வளர்த்து எடுக்கும் வகையில் ‘வானம் கலை திருவிழா’ நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் இலக்கிய சூழலுக்கும் பொது மக்களுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. அவர்கள் இலக்கியத்தை கொண்டாடுவது குறைவு. ஆனால் இன்று எழுத்தை வாசிக்கும் இளைஞர்கள் அதிகரித்து வருகின்றனர்.

அமெரிக்க ஆப்ரிக்க மற்றும் அரபி இலக்கியங்கள் கொண்டாடும் அதே அளவுக்கு தமிழ், இந்திய சூழலில் தலித் இலக்கியம் கொண்டாடப்பட வேண்டும். இந்தியாவில் இந்தி ஆதிக்க மொழியாக இருக்கிறது. நம்மைவிட உயர்ந்தவர்கள் என்ற எண்ணம், வட இந்தியர்களுக்கு உள்ளது. எனவே, இந்தியை எப்போதும் ஏற்கமாட்டோம்.


இந்தியாவில் தமிழ் தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். திராவிடர்களாக நாம் ஒன்று சேர்ந்து நின்றால்தான் தேசிய அளவில் நமக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும். இளையராஜாவின் செயலுக்கு எதிர்வினை ஆற்றிய நபர்களின் மனநிலையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் அதை எதிர்க்கிறோம்.
 இவ்வாறு அவர் கூறினார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!