நடிகர் சிம்புக்கு விரைவில் திருமணம்…! அந்த அதிர்ஷ்டசாலி பொண்ணு யார்னு தெரியுமா…?


நடிகர் சிம்பு என்று சொன்னாலே இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு விதமான உற்சாகம் இருக்கும்..தல அஜித்துக்கு எப்படி ரசிகர்கள் பட்டாளம் உள்ளதோ அதே போன்று நடிகர் சிம்வுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு..

நடிகர் சிம்பு எதை செய்தாலும் அதை ரசித்து பார்க்க ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்அவ்வப்போது நடிகர் சிம்பு பற்றி சர்ச்சை வந்த வண்ணம் இருந்தாலும் இவர் யாரை தான் திருமணம் செய்துக்கொள்ள போகிறார் என்ற கேள்வி அவ்வப்போது எழும். இவரின் ரசிகர்களுக்கும் அதே யோசனை தான் எப்போது தான் திருமணம் செய்துக்கொள்ள போகிறார் என்று தெரியவில்லையே என புலம்புவார்கள்.

சமீபத்தில் சிம்பு நடித்து வெளியான படம் செக்க சிவந்த வானம். இந்த படம் நல்ல வெற்றியை கொடுத்த பின்னர் அதற்கான வெற்றி விழாவை கூட நடத்தினார்கள்.இது குறித்து பேசிய சிம்புவின் அப்பாவும் நடிகருமான டி.ஆர். ராஜேந்திரன், நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், பெண் பார்க்க சிம்பு தன்னிடம் டபுள் ஓகே சொல்லிவிட்டதாகவும் பேட்டியின் போது தெரிவித்து உள்ளார்.

எனவே இந்த செய்தி சிம்புவின் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் சிம்புவுக்கு கல்யாணம் தான் என அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


சிம்புவின் இந்த ரீ எண்ட்ரியை உற்சாகமாக கொண்டாடி வரும் அவர் ரசிகர்களுக்கு, செக்க சிவந்த வானம திரைப்படம் திருவிழாவகவே அமைந்துவிட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவை மாஸாக பார்த்து பூரித்து போன அவரது ரசிகர்களுக்கு மேலும் சந்தோஷம தரும்படியான ஒரு செய்தியை சமீபத்திய பேட்டி ஒன்றின் போது டி.ஆர். தெரிவித்திருக்கிறார்.

நிகழ்ச்சி ஒன்றின் போது பேசிய அவர், செக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து நெகிழ்ந்து போயிருக்கிறார். அப்போது பேசிய அவர் ” சிம்பு திருமணத்துக்கு ஓகே சொல்லிட்டார். பெண் பார்க்கும் வேலையை எங்களிடமே ஒப்படைத்துவிட்டார்.இதனால் எங்கள் பொறுப்பு இன்னமும் கூடி இருக்கிறது.

அவருக்கு ஏற்ற ஒரு பெண்ணை நாங்களும் குடும்பமாக தேடி வருகிறோம். கடவுள் தான் அப்படி ஒரு பெண்ணை எங்கள் கண்ணில் காட்ட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். பின்னே சிம்புவிற்கு பெண் பார்ப்பது என்றால் சாதாரண விஷயமா என்ன?… சிம்புவே ஓகே சொன்னதால் முழு வீச்சில் அவருக்கு பெண் தேடி வருகின்றனர் சிம்பு வீட்டார்.

இதனால் விரைவிலேயே அவருக்கு திருமணம் நடக்க போகிறது என மகிழ்ச்சியில் இருக்கின்றனர் அவரின் ரசிகர்கள். சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார். எப்படியும் 2019ல் அவரை ஜோடியாக பார்க்கலாம் என்பது உறுதி, அந்த ஜோடி யார் என்பது மட்டும் தான் இப்போதைக்கு சஸ்பென்ஸ்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!