தலைவர் 169 படத்திற்கு பதிலாக தனுஷ் படத்தை இயக்கும் நெல்சன் ! உண்மை தகவல் இதோ..

இயக்குனர் நெல்சன் 

இயக்குனர் நெல்சன் குறுகிய காலத்திலே பெரிய அளவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர்.
KoKo, டாக்டர் உள்ளிட்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் தளபதி விஜய்யுடன் இணைத்து பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார்.

பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான பீஸ்ட் திரைப்படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.   

நெல்சன் எடுத்துள்ள முடிவு

இதனால் இப்படம் தமிழ்நாட்டை தவிர மற்ற இடங்களில் வசூலில் சொதப்பி படுதோல்வி அடைந்துள்ளது.

இதனிடையே நெல்சன் அடுத்து ரஜினியின் 169 படத்தை இயக்கவுள்ளார். ஆனால் அப்படம் தொடங்கும் முன்பே பீஸ்ட் பட தோல்வி காரணமாக நெல்சன் அப்படத்தை இயக்கமாட்டார் என்றும், அவருக்கு பதிலாக வேறொரு இயக்குனர் இயக்குவார் என்றும் தகவல் பரவியது.  

மேலும் தற்போது நெல்சன் தனுஷுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக கூறப்பட்டது, இது குறித்து நெல்சன் வட்டாரத்தில் விசாரித்தால் நெல்சன் தலைவர் 169 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார், பீஸ்ட் பட ஸ்கிரிப்ட்-ல் நெல்சன் கவனம் செலுத்தியிருக்கலாம் என்ற பேச்சால் நெல்சன் அப்செட் ஆகியுள்ளதால்.

அந்த பேச்சு ரஜினி படத்தில் வராமல் இருக்க வேண்டும் என ரஜினி 169 பட ஸ்கிரிப்ட்-ல் மீண்டும் ஒருமுறை வேலை செய்து வருகிறாராம் நெல்சன்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!