விஜய்யின் 66வது படத்தில் இவரா விஜய்யுடன் நடிக்கப் போகிறார்?- புதிய கூட்டணி

விஜய் நடித்த பீஸ்ட் வசூல் சாதனை செய்ய சொதப்பிவிட்டது. அடுத்து ரசிகர்கள் தளபதி 66வது படத்தில் விட்டதை பிடித்துவிட வேண்டும் என பெரிய நம்பிக்கையில் உள்ளனர்.

தளபதி 66வது படம்
தோழா பட புகழ் வம்சி பைடிபலி இயக்கத்தில் விஜய்-ரஷ்மிகா புதிய கூட்டணியில் தளபதி 66வது படம் தொடங்கியுள்ளது. இப்படம் காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக போல இது ஃபேமிலியை கவரும் வண்ணம் இருக்கும் என கூறியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் பூஜையும் போடப்பட்டது. தமன் இப்படத்திற்காக 2 பாடல்களை முடித்துவிட்டாராம், அதன் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு விஜய்-ரஷ்மிகாவை நடந்து வருகிறதாம், இன்னும் சில தினங்களில் பாடல் காட்சி படமாக்கப்பட்டு முதல் ஷெட்யூல் முடிந்துவிடும் என்கின்றனர்.


விஜய்யுடன் மோகனா?
இந்த 66வது படத்தில் விஜய்க்கு அண்ணனாக மைக் மோகன் நடிக்கிறார் என செய்திகள் வர அதை அவர் மறுத்துவிட்டார். இப்போது என்ன தகவல் என்றால் நடிகர் ஷ்யாம் விஜய்யுடன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!