சொத்துக்களை சேர்க்கும் அப்பாக்களின் மத்தியில் தல அஜித் எதை சேமிக்கிறார் தெரியுமா..?


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்திற்கு மாபெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, இவர்கள் அஜித் சார்ந்த எந்தவொரு விசயத்தையும் கொண்டாடாமல் இருந்தது இல்லை.

இவருடைய படங்கள், பிறந்த நாள் என இவரை சம்மந்தபட்ட எந்தவொரு சிறிய விஷயம் என்றாலும் அதை ரசிகர்கள் பெரிதாகவே கொண்டாடுவார்கள்.

இவர் படங்கள் வெளியாவதென்றால் திரையரங்குகள் திருவிழா போல் காட்சியளிக்கும்.

கடந்த 3 ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய அஜித்தின் மகள் அனோஷ்காவையும் வாழ்த்தி ரசிகர்கள் பேனர்கள்,

நல திட்ட உதவிகள் என பலவற்றை செய்து வந்தனர், அது தொர்பான சில புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வந்தன.

இதனையடுத்து தற்போது அஜித் தன்னுடைய மகளின் பிறந்த நாளுக்காக நீலாங்கரையில் உள்ள Ziya Children’s Homeல் இருக்கும் குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கியுள்ளார்.

இந்த தகவலை அந்த ஹோமின் உரிமையாளர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்து அஜித்திற்கு நன்றி கூறியுள்ளார்.

மகளுக்காக சொத்துக்களை சேர்த்து வைக்கும் அப்பாக்களின் மத்தியில், இவர் புண்ணியத்தையும் அன்பையும் சேமிக்கிறார்..

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!