விக்ரம் சென்சார் முடிந்தது! ரிசல்ட் இதோ.. படம் இவ்ளோ நீளமா?

கமல்ஹாசனின் விக்ரம் படம் வரும் ஜூன் 3ம் தேதி திரைக்கு வருகிறது. கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில் என பெரிய நட்சத்திரங்கள் சேர்த்து நடித்து இருப்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஏதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.

இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து இருக்கிறது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கி இருப்பதாக தகவல் வெளிவந்து இருக்கிறது.
படம் 2 மணி நேரம் மற்றும் 53 நிமிடங்கள் ஓடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!