பீஸ்ட் சரியில்லாததற்கு அந்த விஷயம் மட்டுமே காரணம்- இது சரியில்லை, எஸ்.ஏ.சி ஓபன் டாக்

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி வெளியாகி இருந்தது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் விஜய்க்கு 65வது படம், இயக்குனர் நெல்சனுக்கு 3வது படம்.

எனவே அவர் விஜய்யை வைத்து இயக்குவதால் படத்தை நல்ல தரமாக இயக்குவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருந்தது. காரணம் இப்படத்திற்கு முன் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படங்கள் ஹிட் லிஸ்டில் இருந்தன.

பீஸ்ட் படத்தின் வசூல்
சென்னையை பொறுத்த வரையில் 5 நாள் முடிவில் படம் ரூ. 7 கோடிக்கு வசூலித்துள்ளது, தமிழகத்தில் நல்ல வசூல் தான். ஆனால் எந்த இடத்திலும் பீஸ்ட் பட வசூல் பெரிய அளவில் இல்லை என்பது தான் உண்மை.

படம் குறித்து எஸ்.ஏ.சி
பீஸ்ட் படம் பற்றி இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சி அவர்கள் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், சில இளம் இயக்குனர்கள் ஆரம்பம் படங்கள் நன்றாக ஓடிவிட்டால் அவர்களுக்கு பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு சீக்கிரம் கிடைத்துவிடுகிறது.

உடனே அவர்கள் என்ன இயக்கினாலும் நடிகராலேயே ஓடிவிடும், வசூல் செய்துவிடும் என அலட்சியமாக உள்ளார்கள். பீஸ்ட் படத்தில் ஸ்கிரீன் பிளே சரியில்லை, படம் சரியில்லாததற்கு அதுவே காரணம் என அவர் கூறியுள்ளார.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!