கலா மாஸ்டருடன் குத்தாட்டம் போட்டு மறுபடியும் அவமானப்பட்ட ஜூலி..!!!


ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கோஷம் போட்டதன் மூலம் பிரபலமான ஜூலிக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற வாய்ப்பு வழங்கியது பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று.

அதில் தனது மோசமான நடவடிக்கைகளால் மக்களின் வெறுப்பை சம்பாதித்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜுலிக்கு,தொகுப்பாளினியாக வாய்ப்பு வழங்கியது கலைஞர் தொலைக்காட்சி.

தற்போது கலைஞர் தொலைக்காட்சில் ஒளிபரப்பாகிவரும் பிரபல ரிவியுவ் ஆனா ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இதற்கு, முக்கிய காரணமே கலா மாஸ்டர்தான் …இவர் தொகுப்பாளியாக ஆனதுமே நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் போட்டு வந்தனர்.இதற்கு இடையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலா மாஸ்டர் ஆடும் போது அவருடன் ஆர்வத்தில் ஜூலி ஆடியுள்ளார்.


அப்போது,இதனைக்கண்ட அங்கு இருந்த பார்வையாளர்கள் ஜூலியை பார்த்து ஏளனமாக சிரிக்க தொடங்கியுள்ளனர்.இதனை உணர்ந்த ஜுலி சத்தமின்றி ஒதுங்கிவிட்டார்.

ஆனால்,அந்த காட்சியினை பிரபல ரிவி வெளியிட்டதால் மீண்டும் நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#