பொண்டாட்டிதான் அதுக்காக இந்த மாதிரியா பண்ணுவீங்க..!! நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!


கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தவர் நடிகை நஸ்ரியா.

இன்னும் சில படங்கள் நடிக்க மாட்டாரா என்று ஏங்கும் நேரத்தில் திடீரென இவர் மலையாள நடிகர் பாகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டே விலகினார்.

சமீபத்தில் திரைக்கு வந்து பிரமாண்ட வெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கும் வேலைக்காரன். இந்த படம் கடந்த மாதம் 22ம் தேதி வெளியானது. இந்த படத்தில் நஸ்ரியாவின் கணவர் பகத் பாசில்தான் வில்லனாக நடித்து உள்ளார்.


இந்த படத்தை இவர் தற்போதுதான் பார்த்துள்ளார். வேலைக்காரன் படத்தை மிகவும் என்ஜாய் செய்து பார்த்தேன். கணவருக்காக பெருமைபடுகிறேன் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் கணவர் படத்தையே இவ்வளவு லேட்டாக பார்த்து இருக்கிறாரே. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று கூறி வருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!