வலிமை எனக்கு முழு திருப்த்தி தரவில்லை – நேர்மையான விமர்சனத்தை கூறிய இயக்குனர் வெங்கட் பிரபு

வலிமை 
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வலிமை. எச். வினோத் இப்படத்தை இயக்கியிருந்தார்.

போனி கபூர் தயாரிப்பில் வெளிவந்த இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வலிமை படம் வெளிவந்த முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 34 கோடி வரை வசூல் செய்து, சர்கார் படத்தின் சாதனையை முறியடித்தது.

வலிமை குறித்து விமர்சனம் கூறிய வெங்கட் பிரபு 
மேலும், உலகளவில் மொத்தம் ரூ. 200 கோடி வரை வசூல் செய்து, அஜித்தின் வலிமை சாதனை செய்துள்ளது. இந்நிலையில், வலிமை படம் குறித்து முதன் முறையாக தனது நேர்மையான விமர்சனத்தை இயக்குனர் வெங்கட் பிரபு.

இதில் ” வலிமை படம் நன்றாக இருந்தது. ஸ்டண்ட் எல்லாம் சூப்பர். ஆனால், நான் அதிகம் எக்ஸ்பெக்ட் பண்ணத்தால், படம் முழு திருப்த்தியை எனக்கு தரவில்லை. எச். வினோத்தின் டீடைலிங் எனக்கு ரொம்ப புடிக்கும். ஆனால், எதோ ஒரு இடத்தில், எனக்கு வலிமை படம் முழு திருப்த்தி தரவில்லை ” என்று நேர்மையாக கூறியுள்ளார்.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!