வசூலை அள்ள ராஜமௌலி போட்டிருக்கும் மாஸ்டர் பிளான்! RRR பாகுபலியை மிஞ்சுமா?

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கி இருக்கும் ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில் படத்தை ப்ரோமோஷன் செய்யும் பணிகளில் குழுவினர் இறங்கி இருக்கின்றனர்.

டிக்கெட் விலை உயர்வு
ஆர்ஆர்ஆர் படத்தின் பட்ஜெட் மிக அதிகம் என்பதால் சினிமா டிக்கெட் விலையை உயர்த்த அனுமதி தரவேண்டும் என சினிமா துறையினர் கேட்டு வந்தனர். 2 கோடிக்கு எடுக்கும் படத்திற்கும் அதே விலை, 300 – 400 கோடி போட்டு எடுக்கும் படத்திற்கும் அதே டிக்கெட் விலையா என டோலிவுட் பிரபலங்கள் சிலர் கேள்வி எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது ஆந்திராவில் ஆர்ஆர்ஆர் படத்திற்கு மட்டும் 10 நாட்களுக்கு டிக்கெட் விலையை 75 ருபாய் அதிகரித்து கொள்ள அரசு அனுமதி அளித்து இருக்கிறது. இதனால் படத்தின் வசூல் கணிசமாக உயரும் என தெரிகிறது.

மேலும் ஆர்ஆர்ஆர் 2D படத்தை தான் முதலில் தியேட்டரில் ரிலீஸ் செய்கின்றனர். படம் வெளியாகி இரண்டாவது வாரத்தில் 3Dயில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அதனால் படத்தை ரசிகர்கள் இரண்டாவது முறையாக 3Dயில் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!