வலிமையை ஓவர்டேக் செய்து ராதே ஷ்யாம் 3 நாளில் வசூல் சாதனை.. இத்தனை கோடியா?

பிரபாஸ் நடித்திருக்கும் ராதே ஷ்யாம் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. தற்போது மூன்றே நாளில் அந்த படம் பிரம்மாண்ட வசூல் பெற்று இருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது.

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு ஹிந்தியிலும் நல்ல மார்க்கெட் கிடைத்திருக்கும் நிலையில் அடுத்தடுத்து அவர் பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்கள் நடித்து வருகிறார். ராதே ஷ்யாம் படம் சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது.


கடந்த வெள்ளிக்கிழமை (11.03.22) வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்கள் தான் பெற்று இருக்கிறது. தெலுங்கு தவிர மற்ற மொழிகளில் இந்த படத்திற்கு சுத்தமாக வரவேற்பு இல்லை என தெரிகிறது. தமிழ்நாட்டில் சுமார் 150 தியேட்டர்களில் மட்டும் வெளியான ராதே ஷ்யாம் படத்திற்கு கலவையான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்திருக்கிறது

3 நாளில் 151 கோடி
இந்நிலையில் தற்போது மூன்று நாள் வசூல் விவரத்தைஅதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர். உலகம் முழுவதும் 151 கோடி வசூல் ஆகி இருக்கிறது என தெரித்துள்ளனர்.
இந்த அறிவிப்பை பிரபாஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!