கார்த்தி செய்த செயல்.. பாராட்டும் மக்கள்

தமிழின் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி செய்த செயலை அனைவரும் பாராட்டி பகிர்ந்து வருகின்றனர்.

பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. முதல் படத்திலேயே முத்திரை பதித்த அவர், தொடர்ந்து பையா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, மெட்ராஸ் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் சினிமா மட்டுமல்லாது சமூக செயல்களில் ஈடுப்பட்டு வருகிறார். விவசாயத்தை கையிலெடுக்கும் வகையில் உழவர் பவுண்டேஷன் என்று ஆரம்பித்து அதன்மூலம் நிறைய விஷயங்களை செய்து வருகிறார்.

தற்போது கொடைக்கானல் மலையில் கடந்த சில நாட்களாக காட்டு தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. அங்கு உள்ள அபூர்வமான மூலிகைகள் மற்றும் மரங்கள் தீயில் கருகி வருகின்றன. அது மட்டுமின்றி ஏராளமான பறவைகள் மற்றும் விலங்குகள் காட்டு தீயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் காட்டுத்தீயை அணைக்க வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில் காட்டுத்தீயை தவிர்க்கவும் அதை கட்டுப்படுத்துவதற்கும் மக்கள் வனத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென நடிகர் கார்த்தி வீடியோ பதிவின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். அதில் கூறியிருப்பது, கோடை வெயிலுக்கு இதமளிக்கும் இயற்கை வளங்கள் தான் காடுகள். குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் ஒரு கனவு பிரதேசம்தான் காட்டு பகுதி.

பறவைகள் தாவரங்கள் ஆகியவை வாழும் அந்த பகுதியை காப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். எளிதாக தீப்பற்றிக்கொள்ளும் பொருள்களை எடுத்து செல்லும்போது ஒரு சின்ன தீப்பொறி பட்டால் கூட காடுகளுடன் சேர்ந்து மரங்கள் பறவைகளும் அழிந்துபோகும் அபாயம் உள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். காட்டுத்தீக்கு எதிரான இந்த போரில் வனத்துறையுடன் இணைந்து நாமும் காடுகளை காப்போம்’ என்று கூறியுள்ளார். இவர் சமூக விழிப்புணர்வோடு இந்த செயலை அனைவரும் பாராட்டி பகிர்ந்து வருகின்றனர்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!