இதை விட சிறந்த பிறவி பலன் வேறொன்றும் இல்லை – லோகேஷ் கனகராஜ்

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ், தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். வித்தியாசமான திரைக்கதை மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார். இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது.

இதையடுத்து விஜய், விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி, முன்னணி இயக்குனராக லோகேஷ் கனகராஜ் உயர்ந்தார். தற்போது கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் கமல் இன்று அறிவித்தார். மேலும் ரசிகராகத் தொடங்கி இயக்குனராக வளர்ந்து இன்று சகோதரராக மாறியிருக்கும் லோகேஷ் கனகராஜ்-க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்’ என்றும் நடிகர் கமல் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார்.


இதற்கு பதிலளித்திருக்கும் லோகேஷ் கனகராஜ், இதை விட சிறந்த பிறவி பலன் வேறொன்றும் இல்லை. நன்றி ஆண்டவரே.. என்று பதிவு செய்திருக்கிறார். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!