விக்ரம் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் இவருடனா கூட்டணி அமைக்கிறார்?- செம கூட்டணி

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில வருடங்களில் ஒரு தொகுப்பாளராகவும், அரசியல் வாதியாகவும் கலக்கி வந்தார். இதனால் அவர் படங்கள் எதுவும் அதிகம் கமிட் செய்யவில்லை.

லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனின் விக்ரம்
இப்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில விக்ரம் என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில் கடைசி படப்பிடிப்பில் கேக்

வெட்டி படக்குழு கொண்டாடியுள்ளனர்.
அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.

பிக்பாஸ் அல்டிமேட் 
பிக்பாஸ் முதல் சீசன் தொடங்கியதில் இருந்து 5 சீசன்கள் தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்தார். ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு புது விஷயத்தை கடைபிடித்து வந்தார்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவந்த அவர் இப்போது வெளியேற சிம்பு கலக்குகிறார்.

கமல்ஹாசன் பிக்பாஸ் 5வது சீசனிற்கு மட்டும் ரூ. 50 கோடிக்கு மேல் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

புதிய கூட்டணி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ள கமல்ஹாசன் அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி இருந்தது. இந்த நிலையில் தான் கமல்ஹாசன், விருமன் படத்தை இயக்கிவரும் முத்தையா இயக்கத்தில் அடுத்த படம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!